Wednesday, February 15, 2012

பள்ளிப் பருவ சிந்தனைகள்..........


பள்ளிப் பருவ சிந்தனைகள்.!.........




எமதூர் மசூத் தைக்கா மேல்நிலைப் பள்ளியில் பயின்ற போது கல்வி அறிவில்லாத அனைவரும் கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தமிழக அரசு கொண்டு வந்த "அறிவொளி இயக்கம்" தொடங்கப் பட்டு அதன் உறுப்பினர்களாக (ஆசிரியர்களாக)மாணவர்கள் பெருமையுடன் வலம் வந்த காலம்........




அப்போது அறிவொளி இயக்க விளம்பரத்திற்காக என்னால் எழுதப்பட்ட கவிதையின் சில வரிகள் தங்கள் பார்வைக்கு ........




குறிப்பு : இது அச்சில் ஏறவில்லை எனினும் என் மன அச்சில் அதன் சில வரிகள் இன்றுவரையிலும் நன்றாகவே பதிந்திருக்கின்றன ......




எட்டடுக்கு மாளிகையில் நீ 
ஏற்றத்துடன் வாழ்ந்திடினும் 
ஏட்டுக் கல்வியே இல்லையெனில் 
எட்டாதடா உன் திறமே 
எல்லாம் நிறைந்த இவ்வுலகிலே.......!


பத்துமா நிலத்தினிலே நீ 
பாடுபட்டு உழைத்திடினும் 
படிப்பென்பதே இல்லையெனில் 
பரவாதடா உன் பெருமை 
பரந்து விரிந்த இப்பாரினிலே.........!


கற்றவருக்கே சிறப்பு எங்கும் 
கல்லாதவர்க்கில்லை என்பதை 
கண்டு திருந்திக் கொள்வீரே 
கல்வி பயில வருவீரே
கண்ணியம் அனைத்தும் பெறுவீரே.........! 


மாடி வீட்டு கோமான்களும் 
மண்ணில் உழைக்கும் விவசாயிகளும்
மனம் உவந்த தம் ஒய்வு நேரத்தில் 
மகிழ்ந்தே கல்வி பயின்றிடலாம்-எனவே 
மனமுடன் இணைவீர் அறிவொளி இயக்கத்தில்......!
---------------------------------------------------------------------------

No comments: